International
பிரான்ஸ்

RATP – பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் புதிய ஆயுதங்கள்!!

RATP இல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கடமையின் போது பயன்படுத்த புதிய துப்பாக்கிகள் முதன் முறையாக வழங்கப்பட உள்ளன.

தேசிய காவல்துறை மற்றும் பல்வேறு பாதுகாப்பு அதிகாரிகள் பயன்படுத்தும் 9mm அரை தானியங்கி கைத்துப்பாக்கிகள் வழங்கப்பட உள்ளன.  RATP பாதுகாப்பு அதிகாரிகள் 1000 பேருக்கு இந்த ஆயுதங்கள் வழங்கப்பட உள்ளன. 2015 ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலின் பின்னர், 2016 ஆம் ஆண்டில் இருந்து அதிகாரிகளால் இந்த ஆயுதம் கோரப்பட்டிருந்தது. இரண்டு வருடங்களின் பின்னர் தற்போது தான் இந்த ஆயுதம் வழங்கும் நடவடிக்கை செயற்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த துப்பாக்கிகள் கட்டாயமாக சுய பாதுகாப்புக்காகவோ, அல்லது பயணிகளின் தனிப்பட்ட பாதுகாப்புக்காகவோ மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், ஒவ்வொரு 5 வருடத்துக்கும் ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!