International
பிரான்ஸ்

Redoine Faid சிறையில் இருந்து தப்பிக்க காரணமான உலங்குவானூர்தி சாரதி கைது!!

கொள்ளையன் Redoine Faïd, சிறையில் இருந்து தப்பிக்க காரணமாக இருந்த உலங்குவானூர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளான். 

கடந்த ஜூலை 2018 ஆம் ஆண்டு கொள்ளையன் Redoine Faïd, Réau (Seine-et-Marne) சிறைச்சாலையில் இருந்து உலங்குவானூர்தி ஒன்றின் மூலம் அவன் தப்பிச் சென்றிருந்தான். பின்னர் நான்கு மாதங்களின் பின்னர் அவன் ஆயுத முனையில் கைது செய்யப்பட்டிருந்தான். இந்த சம்பவத்தில் உலங்கு வானூர்தி சாரதி Stéphane Buy என்பவன் தேடப்பட்டு வந்திருந்தான். இந்நிலையில், நேற்று முன்தினம் திங்கட்கிழமை அவன் கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளான். 

காவல்துறையினரிடம், தாம் கொள்ளையர்களால் பணயக்கைதியாக்கபட்டு, அதன் பின்னர் அச்சுறுத்தலின் பேரில் தாம் இச்செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளான். இது குறித்த உண்மைத்தன்மையை விசாரித்து வருகின்றனர். இவனுடன் சேர்த்து ஒரு பெண் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!