International
பிரான்ஸ்

T2 விபத்து! – மூன்றாவது நாளாக இன்றும் போகுவரத்து தடை!!

திங்கட்கிழமை இரவு Issy-Val de Seine இல் இரண்டு T2 ட்ராம்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, இன்று புதன்கிழமையும் போக்குவரத்து தடை நீடிக்கின்றது.

இன்று பெப்ரவரி 13 ஆம் திகதி, புதன்கிழமை இரண்டாம் இலக்க ட்ராம் சேவைகளில் Issy-Val de Seine இல் இருந்து Parc de St Cloud வரை போக்குவரத்து தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான ட்ராம் திருத்தப்பணிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அதேவேளை, தண்டவாளத்தை திருத்தும் பணி இரவு பகலாக இடம்பெற்று வருகின்றது.

போக்குவரத்து தடைப்படும் இவ்விரண்டு நிலையங்களுக்கு இடையே சிறப்பு பேரூந்துகள் இயக்கப்பட உள்ளன. போக்குவரத்து வழமைக்குத் திரும்புவது குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!