International
பிரான்ஸ்

Toulouse : ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகூட்டினால் பரபரப்பு!!

துலூஸ் மாவட்டத்தில் உள்ள Garonne ஆற்றங்கரையில் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பாகியுள்ளது. 

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜூன் 30 ஆம் திகதி, இங்குள்ள Garonne ஆற்றின் கரையில் நடந்துசென்றுகொண்டிருந்த சில நபர்கள் இந்த எலும்புக்கூட்டை கண்டுள்ளனர். பின்னர் அவர்களே காவல்துறையினரையும் அழைத்தனர். வார இறுதி நாளிலில் ஆற்றங்கரையில் பலர் கூடியிருந்த வேளையில், இந்த எலும்புக்கூடு மீட்பு அங்கிருந்த மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

பின்னர், ஆராய்ச்சியாளர்கள், காவல்துறையின் விஞ்ஞானப்பிரிவு என பல அதிகாரிகள் சம்பவ இடத்தை முற்றுகையிட்டதோடு, குறித்த எலும்ப்புக்கூட்டினை சோதனையிட்டிருந்தனர். பின்னர் அது மனித எலும்புக்கூடு என்பதை உறுதி செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும்படி துலூஸ் நகர அரச வழக்கறிஞர் அலுவலகம் காவல்துறையினரை பணித்துள்ளதாக வழக்கறிஞர் Dominique Alzéari தெரிவித்தார். 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!