International
பிரான்ஸ்

Toulouse : காவல்நிலையத்தில் தீ! – 26 கைதிகள் வெளியேற்றம்!!

நேற்று சனிக்கிழமை இரவு, Toulouse நகர காவல்நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், 26 கைதிகள் வெளியேற்றப்பட்டனர்.

21:00 மணி கடந்து சில நிமிடங்களில், Toulouse மத்திய காவல்நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மஞ்சள் மேலங்கி போராளிகள் உட்பட கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 26 கைதிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீ பரவியதற்குரிய காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தீ பற்றிய சில நிமிடங்களிலேயே தீயணைப்பு வீரர்களால் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை என்பதும் குறிபிடத்தக்கது.

மத்திய Toulouse நகரில், நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் 19 மஞ்சள் மேலங்கி போராளிகள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!