International
பிரான்ஸ்

Trottinettes க்கு எதிராக அதிரடி கட்டுப்பாடுகள்! – ஆன் இதால்கோ அறிவிப்பு!!

பரிசில் தொடர்ச்சியாக trottinettes (மின்சார வண்டிகள்) இனால் ஏறடும் விபத்துக்களை அடுத்து, அது தொடர்பான புதிய கட்டுபாடுகளை, இன்று ஆன் இதால்கோ அறிவித்துள்ளார். 

ஜூன் 6 ஆம் திகதி, இன்று வியாழக்கிழமை இந்த கட்டுபாடுகளை பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ அறிவித்துள்ளார். முதற்கட்டமாக, நடை மேடையில் trottinettes நிறுத்துவதற்கு தடை விதிக்கபட்டுள்ளது. அதேவேளை, வேகக்கட்டுப்பாடும் கொண்டுவரபட்டுள்ளது. பரிஸ் முழுவதும் உள்ள அனைத்து வீதிகளிலும் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் மாத்திரமே பயணிக்க முடியும் எனவும், பாதசாரிகள் நடை மேடையில் மணிக்கு வெறும் 8 கி.மீ வேகத்தில் மாத்திரமே பயணிக்க முடியும் எனவும் ஆன் இதால்கோ அறிவித்துள்ளார். 

பூங்காக்கள், பெருந்தோட்டங்களுக்குள் trottinettes கொண்டுவரவும் தடைவிதிக்கபட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் ஜூலை மாதத்தில் இருந்து கட்டாயப்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!