International
பிரான்ஸ்

Val-de-Marne – ஆற்றில் நீந்திய சிறுவன் பலி! – போராட்டத்தின் பின்னர் உயிர் பிரிந்தது..!!

Marne ஆற்றில் நீந்திய 16 வயதுடைய சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளான். அவசர சிகிச்சைகள் மேற்கொண்டும், தோல்வியில் முடிந்ததால் உயிர் பிரிந்துள்ளது.

அப்பகுதி காவல்துறையினர் வழங்கிய தகவல்களில் இருந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Val-de-Marne இல் ஊடறுக்கும் Marne ஆற்றில் நண்பர்களுடன் குறித்த சிறுவன் நீந்தியுள்ளான். அதன்போதே நீரில் மூழ்கியுள்ளான். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த மீட்புப் படையினர் குறித்த சிறுவனை மயக்கமான நிலையில் மீட்டு, அவசர சிகிச்சைகள் மேற்கொண்டனர். இதயத்தை இயங்க வைக்கும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டும் சிறுவனை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

சிறுவனை மீட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது அதிகாலை 4.30 மணி அளவில் உயிரிழந்துள்ளான். சிறுவர்கள் குளித்தது தடை செய்யப்பட்ட பகுதி என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!