International
பிரான்ஸ்

Val-de-Marne – இரண்டு அறைகளுக்குள் பூட்டிவைக்கப்பட்ட அகதிகள்! – காவல்துறையினர் மீட்டனர்!!

 

சட்டவிரோதமாக பிரான்சுக்குள் நுழைந்த 24 அகதிகள், இரண்டு அறைக்குள் அடைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.


Villejuif (Val – de – Marne) இல் இச்சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. Villejuif காவல்நிலையத்துக்கு வந்திருந்த தொலைபேசி அழைப்பில், தன்னுடைய நண்பர் கடத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர்.  Villejuif நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள இரண்டு அறைகளுக்குள் வியட்னாமைச் சேர்ந்த அகதிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்து அவர்களை மீட்டுள்ளனர். உள்ளே இருந்த 24 அகதிகளில், 12 பேர் சிறுவர்கள் எனவும், 10 பேர் பெண்கள் எனவும் அறியமுடிகிறது. அவர்களில் அனைவராலும் பிரெஞ்சு பேச முடியவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.


பின்னர், குறித்த அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த அகதிகளை அறைக்குள் அடைத்து வைத்தது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாராணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை, இக்குழுவில் கடத்தல்காரர்கள் யாரும் இருந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!