International
பிரான்ஸ்

Val d’Oise : 11 வயது சிறுமி தற்கொலை! – அதிர்ச்சி காரணம்..??!!

கடந்த வெள்ளிக்கிழமை இரவு Val d’Oise இல், 11 வயது சிறுமி ஒருத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். பாடசாலையில் இடம்பெற்ற தொடர் கொடுமையால் இந்த முடிவு எடுத்ததாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

குறித்த சிறுமி, தனது அறையில் தனது உடையினை பயன்படுத்தி தூக்கியில் தொங்கியுள்ளார். பின்னர் சிறுமி மீட்கப்பட்டு பரிசில் உள்ள Robert Debré மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் முதலுதவி எவ்வித பலனும் அளிக்காமல் உயிரிழந்துள்ளார். 

சிறுமியில் தாயார் இந்த தற்கொலை குறித்து தெரிவிக்கும் போது, <<பாடசாலையில் தொடர்ச்சியான பல கொடுமைகளை அனுபவித்துள்ளாள். சில மாணவர்கள் எனது மகளை தொடர்ச்சியாக கேலி செய்து கிண்டல் செய்துள்ளனர்>> என அவர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த பெப்ரவரி மாதத்தில் அச்சிறுமியில் பெற்றோர்கள் குற்றம் சாட்டி, மார்ச் மாதத்தில் சில நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதும், இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!