International
பிரான்ஸ்

Villejuif – கொலைகாரனை பொறிவைத்து பிடித்த காவல்துறையினர்!!

கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் Villejuif இல் வைத்து காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி Villejuif இல் உள்ள வீடு ஒன்றில் இரு நபர்கள் மீது சரமாரியான கத்திக்குத்து இடம்பெற்றிருந்தது. இதில் ஒருவர் உயிரிழந்ததோடு, ஒருவர் பலத்த காயங்களோடு உயிர்பிழைத்திருந்தார்.  இந்த வழக்கை விசாரித்துக்கொண்டிருந்த பரிஸ் 12 ஆம் வட்டார காவல்துறையினர், கொலைகாரனை தேடி வந்தனர். உயிர்பிழைத்த இரண்டாம் நபர் வழங்கிய தகவல்களை அடிப்படையாக கொண்டு, குறித்த நபரை அடையாளம் கண்டுகொண்டனர். 

பின்னர், கடந்த ஞாயிற்றுக்கிழமை Villejuif இல் வைத்து கொலையாளியை பின் தொடர்ந்த காவல்துறையினர், குறித்த நபரை சுற்றி வளைத்து, மடக்கி பிடித்து கைது செய்தனர். இதன்போது கொலையாளி தப்பிக்க முற்பட்டதாகவும் அறியமுடிகிறது. தாக்குதலுக்கு இலக்கான இரு நபர்களும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!