International
பிரான்ஸ்

Yvelines – காவல்துறையை தொடர்புகொண்டு தாயை காப்பாற்றிய ஆறு வயது மகன்!!

ஆறு வயதுடைய சிறுவன் ஒருவன் காவல்துறையினரை தொடர்புகொண்டு தனது தாயை காப்பாற்றிய சம்பவம் ஒன்று கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

Maurepas (Yvelines) பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 38 வயதுடைய அச்சிறுவனின் தாய் கத்தி ஒன்றை வைத்துக்கொண்டு தற்கொலை செய்யப்போவதாக அச்சுறுத்திய வேளையில், அவரின் 6 வயதுடைய மகன் உடனடியாக அவசர இலக்கமான ’17’ இற்கு தொடபுகொண்டு தகவல் தெரிவித்துள்ளான். காவல்துறையினர் அவனிடம் வீட்டின் முகவரியை பெற்றுக்கொண்டு விரைந்து சென்றனர். காவல்துறையினர் வீட்டை அடைய, சிறுவன் கதவை திறந்துள்ளான். ஆனால் அதற்குள் சிறுவனின் தாயார் கத்தியால் தனக்குத்தானே பல்வேறு இடங்களில் வெட்டியிருந்தார். உடனடியாக அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவனின் சாமர்த்தியமான செயலால் அவனது தாய் உயிர்ச்சேதமின்றி காப்பாற்றப்பட்டுள்ளார். பின்னர் சிறுவனும் மனநல சிகிச்சைகளுக்காக  Rambouillet மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். தாயாரின் தற்கொலை முயற்சிக்கான காரணங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!