International
மலேசியா

அடுக்குமாடி வீட்டில் அயர்லாந்து பிரஜை கொலை

கோலாலம்பூர், மார்ச் 5 – பினாங்கு, ஜாலான் சுல்தான் அகமட் ஷாவில் உள்ள எம்பிஎஃப் கட்டட அடுக்குமாடி வீடொன்றில் அயர்லாந்து பிரஜையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அவரின் உடலுக்கு அருகே, ‘நான் போலீசாரின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன் ஆனால் சில சமயங்களில் அதனை கேட்டுத்தான் பெற வேண்டும். நான் மாஃபியா கும்பலை வெறுக்கிறேன், எனது காதலியை விரும்புகிறேன்’ என்ற வாசகங்களைக் கொண்ட கையெழுத்துக் குறிப்பு ஒன்று காணப்பட்டது.

அந்த ஆடவர் 50 வயதான பிரியான் பேட்ரிக் ஓ’ரீய்லி என்றும் அவர் சிங்கப்பூர் நிறுவனமான ஃபர்ஸ்ட் லுக்கவுட் மார்கெட்டிங் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப நிர்வாகி என்றும் தெரியவந்துள்ளது.

அவர் சமையல் பாத்திரம் மற்றும் இரும்புத் தட்டினால் தாக்கப்பட்டு, வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டு கழுத்து அறுக்கப் பட்டிருந்ததாக ஜோர்ஜ் டவுன் போலீஸ் துணை ஆணையர் சே ஸைமானி சே அவாங் தெரிவித்தார்.

The post அடுக்குமாடி வீட்டில் அயர்லாந்து பிரஜை கொலை appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!