International
மலேசியா

அடுக்குமாடி வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மாதுவின் வேதனைக் கதை!

ஜார்ஜ்டவுன், பிப். 28 – தாம் இந்திய நாட்டவரை மணந்து கொண்டதால், 12 ஆண்டுகள் குடியிருந்த அடுக்கு மாடி வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக   63 வயதுடைய  ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

நேற்று,  மாநில அரசின் வீடமைப்புப் பிரிவின் 20 அதிகாரிகள் போலீசாரோடும்  இரும்பு வெட்டும் கருவிகளோடும் வந்து,   வெளியேறும்படி அச்சுறுத்தியதாகக்  குறிப்பிட்டார்.

மெக்காலிஸ்டர் மற்றும் ஜாலான் பர்மா சந்திப்பில் ஜாலான் ஸைனால் அபிடின் சாலையில் அமைந்துள்ள தாமான் மாங்கிஸ் பிபிஆர்  அடுக்கு மாடியிலுள்ள  650 சதுர அடி பரப்புள்ள வீட்டைக் காலி செய்யும்படி கடந்தாண்டு அக்டோபரில் கிடைத்த கடிதத்திற்கு  தாம் பதில் அளித்திருந்ததாகவும் ஆனால், இதுவரை அதற்கான பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

22 ஆண்டுகளுக்கு முன்னர்,  லிமோசின் ஓட்டும் இந்திய நாட்டவரை திருமணம் செய்து கொண்டு,  அந்தக் குடியிருப்பில் 12 ஆண்டுகளாக  வசிப்பதாகவும்  100 ரிங்கிட் வாடகையில்  அந்த வீட்டில் தாம் குடியிருக்கத் தகுதி இல்லை என்று அவர்கள் காரணம் கூறுவதாகவும் அவர் சொன்னார். அந்தக்  குடியிருப்பில் உள்ள மேலும் 17 குடும்பங்களும் நேற்று வெளியேற்றப்பட்டன.

மிகவும் வறுமையான குடும்பங்களுக்கு 100 வெள்ளி வாடகையில் மாநில அரசு அந்த அடுக்கு மாடி வீட்டை வாடகைக்குத் தந்து வருகிறது. இதனிடையே அதில் தலையிட்ட கோம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் ஹெங், அந்தக் குடும்பங்கள் அக்குடியிருப்பில் தங்கியிருக்கும் காலத்தை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கும் அவகாசத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.

The post அடுக்குமாடி வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மாதுவின் வேதனைக் கதை! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!