International
மலேசியா

அதிரடி நடவடிக்கை: தீவிரவாதிகள் 9 பேர் கைது

கோலாலம்பூர், மார்ச்.10 – பல நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்த  அல் கய்டாவுடன் தொடர்புடைய தீவிரவாத அமைப்ப்பைச் சேர்ந்த 9 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர்.

அன்சார் அல்-ஷாரியா அல்-துனிஷியா எனும் அல் கய்டாவின் தொடர்புடைய அமைப்பைச் சேர்ந்த இரு மலேசியர்கள் 6 எகிப்தியர்கள் மற்றும் ஒரு துனிசியர் ஆகியோர் சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் சரவாக்கில் பிப்ரவரி 2லிருந்து 9 வரை கைது செய்யப்பட்டனர்.

சிரியாவில் ஐஎஸ் ஆயுதப் போராட்டம் தோல்வி அடைந்துள்ளதால், தீவிரவாதிகள் மலேசியாவை தளமாகக் கொண்டு, மற்ற நாடுகளிலும் மலேசியாவிலும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகப் போலீஸ் தலைவர் ஃபுஸி ஹருண் தெரிவித்தார்.

மலேசியாவை தீவிரவாதிகள் தங்கிச் செல்லும் தளமாக பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை கணகாணித்த பயங்கரவாத ஒழிப்புச் சிறப்புப் பிரிவு இந்த கைது நடவடிக்கையில் இறங்கியது.

போலிப் பயண ஆவணங்களைப் பயன்படுத்தி அல்லது உள்ளூர்க்காரர்களைத் திருமணம் செய்து கொண்டு குடிநுழைவுத் துறையின் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட முறையில்  நாட்டுக்குள் நுழையும் யுக்திகளைக் கடைப்பிடிப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

The police picked up nine suspects with links to an African-based terror group behind alleged plans to launch large-scale attacks in several countries in a raid held last month.

The post அதிரடி நடவடிக்கை: தீவிரவாதிகள் 9 பேர் கைது appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!