International
மலேசியா

அந்த 3 சிறுவர்களுக்கும் குடியுரிமை! நீதிமன்றத்தில் மகிழ்ச்சி செய்தி!

புத்ராஜெயா, பிப்.14- மலேசியாவில் பிறந்த போதும் குடியுரிமை வழங்கப் படாத மூன்று சிறுவர்கள், நீதிமன்றத்தில் அரசாங்கத்தின் மீது தொடங்கிய வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப் படுவதற்கு முன்னர், மலேசிய குடிமக்களாக ஏற்றுக் கொள்ளப் பட்டனர்.

குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்த அந்த மூன்று சிறுவர்களுக்கும், உள்துறை அமைச்சர் குடியுரிமையை வழங்கினார் என்று அந்த மூன்று சிறுவர்களில் இருவரின் வழக்கறிஞரான டத்தோ சைரூஸ் தாஸ் கூறினார்.

“அந்த வழக்கின் தீர்ப்பிற்காக காத்திருந்த அந்த மூன்று சிறுவர்களுக்கும், குடியுரிமையை வழங்குவதாக உள்துறை அமைச்சர் எடுத்த முடிவை, நீதிமன்றத்தில் தெரிவித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.

“அரசியலமைப்புச் சட்டத்தின் 15 (ஏ) விதிமுறையின் கீழ், அந்த மூன்று சிறுவர்களுக்கும் குடியுரிமை வழங்கப் பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

21 வயதை அடையாத ஒருவருக்கு தனக்கு வழங்கப் பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, அரசாங்கம் குடியுரிமையை வழங்கலாம் என்று அந்த விதிமுறையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

“இன்று காலை, நீதிமன்ற தீர்ப்பிற்கு முன்னதாகவே, 17, 16 மற்றும் 8 வயதான அந்த மூன்று சிறுவர்களுக்கும் குடியுரிமை வழங்க உள்துறை அமைச்சு முடிவெடுத்து உள்ளது என்பது தொடர்பிலான கடிதம் எங்களிடம் வழங்கப் பட்டது” என்று சைரூஸ் சொன்னார்.

The post அந்த 3 சிறுவர்களுக்கும் குடியுரிமை! நீதிமன்றத்தில் மகிழ்ச்சி செய்தி! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!