International
மலேசியா

அந்நிய தொழிலாளர்களை தருவிக்க சீரான கொள்கை; நாளை அறிக்கை – குலா

கோலாலம்பூர், பிப். 27 – அந்நிய நாட்டுத் தொழிலாளார்களைத் தருவிக்க சீரமைக்கப்பட்ட  கொள்கையை அமல்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட சுயேட்சைப் பணிக்குழுவின் ஆய்வறிக்கை நாளை வெளியிடப்படும் என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதிபதி டத்தோஶ்ரீ ஷிஷாமுடின் யூனுஸின் தலைமையில் அமைக்கப்பட்ட பணிக்குழு, அந்நிய தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வகுக்க வேண்டிய கொள்கைகள் மற்றும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கொண்டிருக்கும்.

அந்தப் பணிக்குழு கடந்தாண்டு அக்டோபரில் உருவாக்கப்பட்டு, அந்நிய தொழிலாளர்களைத் தருவிக்கும் சீரான நடைமுறை, வேலை தடை படுவதைத் தவிர்த்தல், நியாயமான சம்பளம் வழங்குதல் அவர்களுக்கான பாதுகாப்பு போன்ற பரிந்துரைகள் அந்த ஆய்வறிக்கையில் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதனிடையே, சிங்கப்பூரில் கடைபிடிக்கப்படுவது போன்று, அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்க ஆன் லைன் சேவை தொடக்கப் பட்டிருப்பதாகவும், அதன் வாயிலாக மூன்றாம் தரப்பினர் அதில் தலையிடுவதைத் தவிர்க்கவும், அந்த விவகாரத்தில் நிலவும் ஊழலைத் தடுக்கவும் முடியும் என குலசேகரன் தெரிவித்தார்.

The post அந்நிய தொழிலாளர்களை தருவிக்க சீரான கொள்கை; நாளை அறிக்கை – குலா appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!