International
மலேசியா

அபுதாபியில் முதல் தங்கம் வென்றார் பனிச்சறுக்கு தாரகை ஶ்ரீ அபிராமி!

அபு தாபி,பிப்.14- ஐக்கிய அரபு சிற்றரசு- அபுதாபியில் இன்று தொடங்கிய அனைத்துலக பனிச்சறுக்குப் போட்டியில், நாட்டின் இளம் பனிச்சறுக்கு வீராங்கனையான ஶ்ரீ அபிராமி முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

7 வயதிலிருந்து 8 வயதுக்கு உட்பட்ட 5 பிரிவுகளில் பங்கேற்கும் ஶ்ரீ அபிராமி சற்று முன் நடந்த ‘ஸ்பீட் ஸ்கேட்டிங்’ பிரிவில் இந்த தங்கத்தை வெற்றிக் கொண்டார். இந்நிலையில், வெள்ளிப் பதக்கத்தை ஐக்கிய அரபு சிற்றரசைச் சேர்ந்த ஸ்தம்ப் சாராவும், வெண்கலப் பதக்கத்தை குவைத்தைச் சேர்ந்த அங் செப்பினாவும் வென்றுள்ளனர்.

தங்களை வென்று குவிப்பது ஶ்ரீ அபிராமிக்கு புதிதல்ல என்றாலும் பல சவால்களுக்கு இடையே அபுதாபியை அடைந்து, முதல் பிரிவிலேயே தங்கத்தை அவர் வாகை சூடியிருப்பது சாதாரண விஷயமல்ல; பாராட்டத்தக்க ஒன்றாகும்.

ஶ்ரீ அபிராமிக்கு வணக்கம் மலேசியாவின் வாழ்த்துகள்! அடுத்து வரும் பிரிவுகளிலும் அவர் தங்கப் பதக்கங்களை வெல்ல வாழ்த்துவோம்!

The post அபுதாபியில் முதல் தங்கம் வென்றார் பனிச்சறுக்கு தாரகை ஶ்ரீ அபிராமி! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!