International
மலேசியா

அப்பாவி மாணவரை அடித்து உதைக்கும் சக மாணவர்கள்; வைரலாகும் காணொளி- (video)

கோலாலம்பூர்,பிப்.14- சக மாணவர்களால் பகடி வதைக்கு ஆளாகும் எத்தனையோ மாணவர்கள் தற்கொலைக்கு ஆளாவதையும், இல்லையேல் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிப்புக்கு இலக்காவதையும் நாம் கேள்விப் பட்டிருப்போம். சிலர் அது போன்ற சம்பவங்களை கண்கூடாகவும் பார்த்திருக்கலாம்.

இந்நிலையில், தேசியப்பள்ளி ஒன்றில் அப்பாவியாக நின்றுக் கொண்டிருக்கும் ஒரு மாணவரை சக மாணவர்கள் சேர்ந்து பகடி வதை செய்யும் காணொளி இன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

☞ “Kecik kecik dah nak jadi samseng..” Lokasi S.K Lubuk Kawah Jerteh 2019.. Jika terjadi pada anak anda apa yang anda akan buat kepada setan2 ini? Minta Jasa baik anda Share banyak2, agar pembuli ditangkap. Jika salah info akan dikemaskini di comments semula jika ada maklumat lain..⭕ Jom Follow ➡ Deejay Nesh Instagram to get greatest and latest news updates.. Link: www.instagram.com/deejayneshmedia

Posted by Deejay Nesh on Wednesday, 13 February 2019

அந்த ஒரு மாணவரை அத்தனைப் பேரும் வயிற்றுப் பகுதியிலேயே எகிறி உதைப்பதும், குத்துவதும் அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம், திரங்கானுவிலுள்ள லுபுக் காவா ஜெர்த்தே என்ற தேசியப்பள்ளியில் நிகழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும், அந்த மாணவர் யார்? அவரை ஏன் அந்த மாணவர்கள் அவ்வாறு அடித்து துன்புறுத்துகின்றனர்? இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா இல்லையா என்பது குறித்து இன்னும் தகவல்கள் கண்டறியப்படவில்லை.

The post அப்பாவி மாணவரை அடித்து உதைக்கும் சக மாணவர்கள்; வைரலாகும் காணொளி- (video) appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!