International
மலேசியா

அம்னோ தந்த பணத்தில் ஆடம்பரக் கார்கள் வாங்கிய பாஸ் தலைவர்கள்?

கோலாலம்பூர், பிப்.8- 2016 ஆம் ஆண்டு அம்னோவிடமிருந்து பெற்ற 90 மில்லியன் ரிங்கிட் பணத்தில் ஆடம்பரமான கார்கள் பங்களாக்கள் உள்ளிட்ட சொத்துக்கள் வாங்கப்பட்டிருப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.எ.சி.சி.யின் புலன் விசாரணை பற்றி நன்கு அறிந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்து இருப்பதாக மலேசியக் கினி இணைய நாளிதழின் செய்தி ஒன்று கூறுகிறது.

பி.எம்.டபள்யூ, மினி கூப்பர், டோயோட்டா வெல்ஃபயர்,போர்ஷே, ரேஞ்ச் ரோவர்ஸ், பென்ஸ், ஆவ்டி கியூ 7, ஆவ்டி ஏ6, மற்றும் பிஎம் டபள்யூ மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பாஸ் தலைவர்கள் பலர் வாங்கியுள்ளனர் என்று அந்த வட்டாரம் கூறியது.

இந்தப் பட்டியலில் பங்களா வீடுகள் மற்றும் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வாகன நெம்பர் பட்டைகள் ஆகியவையும் அடங்கும். பங்களா வீடுகளில் ஒன்று பாங்கியில் 3 மில்லியன் ரிங்கிட்டிற்கு வாங்கப் பட்டிருப்பதாக அந்த வட்டாரம் தெரிவித்தது.

1எம்டிபி நிதியிலிருந்து பாஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படும் 90 மில்லியன் ரிங்கிட் விவகாரம் குறித்து நடப்பு மற்றும் முன்னாள் பாஸ் தலைவர்கள் பலரிடம் எம்.ஏ.சி.சி. தனது விசாரணையை தொடங்கியுள்ளது.

The post அம்னோ தந்த பணத்தில் ஆடம்பரக் கார்கள் வாங்கிய பாஸ் தலைவர்கள்? appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!