International
மலேசியா

அரசின் மீதான மக்கள் நம்பிக்கை கூடியுள்ளதா? -ஆய்வு

கோலாலம்பூர், மார்ச் 5 – ஓராண்டுக்கு முன்னர் இருந்த நிலை மாறி தற்போது, அரசின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக இணைத்தள ஆய்வு நிறுவனமான ஈடெல்மேன் டிரஸ்ட் பேரோமீட்டர் குறிப்பிட்டுள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் 19லிருந்து நவம்பர் 16 வரையில் 27 நாடுகளில் 33,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் மலேசியா 60  புள்ளிகள் பெற்று தென் ஆப்பிரிக்கா( 21), பிரேசில்( 28), ரஷ்யா( 34), ஜப்பான்( 39), அமெரிக்கா( 40), ஆஸ்திரேலியா( 42) மற்றும் ஹங்காங்(55) ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

இந்த ஆய்வில் அரசின் மீதான சராசரியான நம்பிக்கையானது 47 புள்ளிகளாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த பக்காத்தான் ஆட்சியின் மீது பொதுமக்களின் நம்பிக்கை கூடியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் பொருளாதர வளம், அரசின் பாதுகாப்பு மற்றும் கொள்கைகள், ஊடகங்கள் மற்றும் அரசு சாரா இயக்கங்களின் மீதான நம்பிக்கை போன்ற அம்சங்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

The post அரசின் மீதான மக்கள் நம்பிக்கை கூடியுள்ளதா? -ஆய்வு appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!