International
மலேசியா

அரசுக்கு எதிராகச் அரசாங்க ஊழியர்கள் செயல்படக் கூடாது – வான் அஸிஸா !

கோலாலம்பூர், மார்ச் 4 –  அரசு ஊழியர்கள் அரசுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபடாமல் முழு விசுவாசத்தை வெளிப்படுத்த வேண்டுமென துணைப் பிரதமர் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் கேட்டுக் கொண்டார்.

அரசு ஊழியர்கள் வெவ்வேறு அரசியல் சிந்தாந்தங்களைக் கொண்டிருந்தாலும்  அரசின்பால் விசுவாசமாகவும் உண்மையானவர்களாகவும் நடந்து கொள்ள  வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
அரசாங்க முயற்சிகள் குறித்து தவறான தகவலை பரப்ப வேண்டாம் எனவும் துணைப் பிரதமர் அரசாங்க ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டார்.

அரசியல் வேறுபாடுகள்  இருந்தாலும் அணி, இன, சமய வேற்றுமைகளை மக்களுக்கு ஆற்றும் சேவைகளில் வெளிப்படுத்தக் கூடாது என இன்று புத்ரா ஜெயாவில் மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் 644 ஊழியர்களுக்கு அடைவுநிலை விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றும்போது,  அஸிஸா அவ்வாறு குறிப்பிட்டார்.

The post அரசுக்கு எதிராகச் அரசாங்க ஊழியர்கள் செயல்படக் கூடாது – வான் அஸிஸா ! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!