International
மலேசியா

ஆற்றில் நால்வரை காப்பாற்றும் முயற்சியில் உயிர்நீத்தவரின் உடல் மீட்பு!

கோலத் திரங்கானு, பிப்.9 – சுங்கை திரெங்கானு ஆற்றில் வாகனத்தோடு மூழ்கவிருந்த நால்வரை பேரைக் காப்பாற்றும் முயற்சியின் போது உயிர்நீத்த 31 வயதுடைய அப்துல் பாரி அஸ்ராப்பின் உடல் நீண்ட தேடும் பணிக்குப் பின்னர் இன்று காலை மீட்கப்பட்டது.

அவர் ஆற்றில் மூழ்கிய இடத்தில் இருந்து இரண்டரைக் கிலோ மீட்டர் தொலைவில் ஆற்றின் கரையோரம் அவரது உடல் ஒதுங்கி இருந்தது. வழிப் போக்கர் ஒருவர் அவரது உடலைக் கண்டு மீட்புப் படையினருக்கு தகவல் கொடுத்தார்.

வெள்ளிக் கிழமை இரவு 9.30 மணியளவில் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ஆற்றின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த மிட்சுபிஷி ஸ்டோர்ம் வாகனம் ஒன்று, முன்நோக்கி நகர்ந்து ஆற்றினுள் விழுந்ததைக் கண்டு அவர்களுக்கு உதவுவதற்காக அப்துல் பாரி அஸ்ராப் ஆற்றில் குதித்தார்

அவருடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த இதர சகாக்களும் ஆற்றில் குதித்து அந்த வாகனத்தில் இருந்த ஐவரை மீட்க முனைந்தனர். சிறிது நேரப் போராட்டத்திற்குப் பின்னர் வாகனத்தில் இருந்த நால்வரும், இதர இருவரும் பத்திரமாக கரைக்கு திரும்பினர்.

ஆனால், அஸ்ராப்பை மட்டும் காணவில்லை. அவர் நீரில் மூழ்கி விட்ட நிலையில் அவரைத் தேடும் பணி இரண்டு நாள்களாக மேற்கொள்ளப்பட்டு இன்று காலை அவரது உடல் மீட்கப்பட்டது.

The post ஆற்றில் நால்வரை காப்பாற்றும் முயற்சியில் உயிர்நீத்தவரின் உடல் மீட்பு! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!