கோலத் திரங்கானு, பிப்.9 – சுங்கை திரெங்கானு ஆற்றில் வாகனத்தோடு மூழ்கவிருந்த ஐந்து பேரைக் காப்பாற்றும் முயற்சியின் போது 31 வயதுடைய அப்துல் பாரி அஸ்ராப் என்பவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
இரவு 9.30 மணியளவில் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ஆற்றின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த மிட்சுபிஷி ஸ்டோர்ம் வாகம் ஒன்று, முன்நோக்கி நகர்ந்து ஆற்றினுள் விழுந்ததைக் கண்டு அவர்களுக்கு உதவுவதற்காக அப்துல் பாரி அஸ்ராப் ஆற்றில் குதித்தார்.
Video Source: Fb- Deejay Nesh
அவருடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த இதர சகாக்களும் ஆற்றில் குதித்து அந்த வாகனத்தில் இருந்த ஐவரை மீட்க முனைந்தனர்.
சிறிது நேரப் போராட்டத்திற்குப் பின்னர் வாகனத்தில் இருந்த ஐவரும், இதர் இருவரும் பத்திரமாக கரையேறி விட்டனர்.
ஆனால், அப்துல் பாரி அஸ்ராப் மட்டும் கரையேற வில்லை. அவர் நீரில் மூழ்கி விட்டதாக அஞ்சப்படுகிறது. அவரைத் தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப்படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
The post ஆற்றில் விழுந்த ஐவரை காப்பாற்ற போராடியவர் நீரில் மூழ்கிய சோகம்! -Video appeared first on Vanakkam Malaysia.
