International
மலேசியா

இந்தியர்கள் முதலீடு செய்த பெஸ்தினோ திட்டம்: மே 15-16 இல் வழக்கு மறுவிசாரனை

ஈப்போ, மார்ச். 5- இங்கு தங்க முதலீட்டு திட்டத்தில் சுமார் 6,746 இந்தியர்கள் முதலீடு செய்த ரிம. 411 மில்லியன் பணத்தை மீட்கும் முயற்சியாக தொடரப்பட்டிருந்த வழக்கின் மறு விசாரணை மே 15 மற்றும் 16ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

முன்பு இங்குள்ள ஈப்போ உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் முதலீட்டாளர்கள் தோல்விக் கண்டனர். பெஸ்தீனோ முதலிட்டாளர்கள் அதன் நிர்வாக இயக்குநர்கள் மீது தொடுத்த வழக்கினை ஈப்போ நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது .

தீர்ப்பினை ஆட்சேபித்து அதன் முதலீட்டாளர்களின் பிரதிநிதிகளான ஐவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கை பதிவுச் செய்தனர். வழக்கின் முழு சாரம்சங்களையும் நீதிமன்றம் விசாரிக்காத நிலையில் சட்ட நுட்ப அணுகுமுறைகளை மையமாக வைத்து நீதிமன்றம் முதலீட்டாளர்களின் வழக்கினை தள்ளுபடி செய்தது.

அதன் பின்னர் மேல் முறையிட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பில் இந்த வழக்கை மறு விசாரணை நடத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன்படி இந்த வழக்கு விசாரணை மே மாதம் 15 மற்றும் 16 ஆகிய இரு தேதிகளில் மறு விசாரணக்கு வருகிறது.

முதலீட்டாளர்களின் சார்பில் அ.கோபாலன் நாயர், க.பாலகிருஷ்ணன், க.கண்ணையா, வ.விஜய் மற்றும் மு.கோபாலன் ஆகியோர் கடந்த டிசம்பர் 2015 -இல் தான் அந்நிறுவன இயக்குநர்கள் மீது வழக்கு தொடுத்தனர்.

The post இந்தியர்கள் முதலீடு செய்த பெஸ்தினோ திட்டம்: மே 15-16 இல் வழக்கு மறுவிசாரனை appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!