International
மலேசியா

இந்தியா- பாக். போரைத் தடுக்க திரைமறைவில் போராடிய இரு நாடுகள்! -(Video)

புதுடில்லி, மார்ச். 2- இந்திய விமானி அபிநத்தனை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ள போதிலும் இதற்காக திரைமறைவில் ஏராளமான அரச தந்திரப் போராட்டங்கள் நடந்துள்ள விவரம் தற்போது வெளிவந்துள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளன. தீவிரவாதிகளின் அண்மைய தற்கொலைத் தாக்குதலில் தாக்குதலில் 44 இந்திய வீரரகள்
கொல்லப்பட்ட நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடும் போர்ப் பதற்றமான சூழல் உருவானது.

Video Souece: Around Telugu

பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்ட இந்திய விமானி அபி நந்தனை மீட்க மீட்கும் நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது ஐக்கிய அரபு நாடுகளும் சவுதி அரேபியாவும் முக்கிய பங்காற்றியதாக தெரிய வந்துள்ளது.

இந்தியாவுக்கான சவுதி அரேபிய தூதர் சவுத் அல் சாத்தி இந்த விவகாரம் தொடர்பாக டில்லியில் பிரதமர் மோடியை நேரில்  சந்தித்து பேசியுள்ளார். அது மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமரும் முகமது பின் சயாத்தும் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு
பேசியுள்ளார்.

இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் நடக்கக்கூடாது என்பதில் சவுதி அரேபியா இளவரசர் சல்மான் மற்றும் அபுதாபி இளவரசர் முகமது சயாத்தும் தீவிரமாக இருந்துள்ளனர். சவுதி இளவரசர் சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது இருநாடுகளிலும் பல கோடி மதிப்பிலான முதலீடுகள் செய்ய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. அது போலவே ஐக்கிய அரபு அமீரகமும் பெருமளவு முதலீடு செய்து வருகிறது. இந்நிலையில் இருநாடுகளுக்கும் இடையே போர் மூண்டால் பொருளாதார பின்னடைவு ஏற்படும் என்பதால் அதனை தவிர்க்க இருநாடுகளும் தீவிரம் காட்டியதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே நேற்று இரவு அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் பாகிஸ்தான் ராணுவத்தின் முழுப் பாதுகாப்புடன் ஜமார் வாகனங்கள் புடை சூழ வாஹா எல்லையை அபிநந்தன் அடைந்த போது விண்ணப் பிளக்கும் வண்ணம் வரவேற்பு முழக்கமிட்டவாறு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உற்சாக வரவெற்பு அளித்தனர்.

The post இந்தியா- பாக். போரைத் தடுக்க திரைமறைவில் போராடிய இரு நாடுகள்! -(Video) appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!