International
மலேசியா

இம்ரான் கானுக்கு நோபல் பரிசா?

இஸ்லாமாபாத், மார்ச்.2- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அமைதிக்கான நோபல் விருது அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தானிலுள்ள வலைத்தள வாசிகள் பலர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

விமானி அபிநத்தன் பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் உலகம் முழுவதும் இருந்து தலைவர்கள் பலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டாகி வருகின்றன.

பாகிஸ்தானில் மட்டுமல்லாது இந்தியாவில் எதிர்க்கட்சித்
தலைவர்களும் பொதுமக்களும் இம்ரான் கானின் முன்னெடுப்பை பாராட்டி வருகின்றனர்.

இதனிடையே இம்ரான்கானுக்கு அமைதிக்கான நோபல் விருது அளிக்க வேண்டும் என்று இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் டுவிட்டரில் இது தொடர்பான ஹேஷ்டேக்குகள் தேசிய அளவில் டிரெண்டாகி வருகின்றன.

————————————

The post இம்ரான் கானுக்கு நோபல் பரிசா? appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!