International
மலேசியா

இளம்பெண்ணை கடத்தி வீட்டில் அடைத்து பலமுறை கற்பழித்த நபர் கைது!

தெலுக் இந்தான், மார்ச்.6- கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி கடத்தப்பட்ட 25 வயதுடைய இளம் பெண் ஒருவர், தெலுக் இந்தான், ஜாலான் லக்சமணாவிலுள்ள வீடு ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டு தொடர்ச்சியாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

கடந்த 4ஆம் தேதி அந்தப் பெண் தப்பித்து வந்து பின்னர் போலீசில் புகார் செய்தார்.

சுமார் 20 வயதுக்கு மேற்பட்ட நபர் எனக் கருதப்படும் ஒருவரால் தாம் கடத்தப்பட்டு ஜாலான் லக்சமனாவிலுள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப் பட்டதாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து ஜாலான் கெபுன் லிமாவிலுள்ள வீடு ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அந்தப் பெண் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

அங்கு சிறிது நேரம் தன்னை தனியாக விட்டு விட்டு அந்த நபர் வெளியே சென்றிருந்த வேளையில் அந்தப் பெண், அங்கிருந்து தப்பித்து, வழிப் போக்கர்களின் உதவியுடன் போலீஸ் நிலையத்தை அடைந்ததாக பேரா குற்றப் புலனாய்வுத் துறை தலைமை அதிகாரி யஹ்யா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது தாம் பாலியல் ரீதியில் தாக்கப்பட்டதோடு, பலமுறை அடிக்கப் பட்டதாகவும் திருப்புளியால் தலையில் தாக்கப் பட்டதாகவும் அந்தப் பெண் புகாரில் கூறியுள்ளார்.

இதனிடையே சந்தேகப் பேர்வழி ஒருவனைத் தாங்கள் கைது செய்திருப்பதாக போலீஸ் அதிகாரி யஹ்யா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். கற்பழிப்புக்காக குற்றவியல் சட்டத்தின் 376ஆவது பிரிவின் கீழ் இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

The post இளம்பெண்ணை கடத்தி வீட்டில் அடைத்து பலமுறை கற்பழித்த நபர் கைது! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!