International
மலேசியா

இளம் வாக்காளர்கள் எங்கள் பக்கமே! – அம்னோ பெருமிதம்

கோலாலம்பூர், மார்ச். 6 – செமிஞ்சே இடைத்தேர்தலில் இளம் வாக்காளர்களைக் கவர்வதில் தேசிய முன்னணி வெற்றி பெற்றிருக்கிறது.  அதற்குத் தங்களின் சமூக ஊடகப் பிரசாரம் உதவியிருப்பதாக சிலாங்கூர் அம்னோ இளைஞர் தலைவரும் சுங்கை ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினருமான ரிஸாம் இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.

அம்னோ பாஸ் கட்சியோடு இணைந்து மசீச மற்றும் மஇகா இளைஞர் பிரிவினரோடு கடுமையாக உழைத்ததன் மூலம் இளம் வாக்காளர்களை ஈர்க்க முடிந்ததாக அவர் தெரிவித்தார்.

பிடிபிடிஎன் கடன் உட்பட பல தேர்தல் வாக்குறுதிகளைப் பக்காத்தான் நிறைவேற்றத் தவறியது தினந்தோறும் வெளியிடங்களில் வேலைக்குச் செல்வோர் அதிகமான டோல் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருப்பது போன்ற பல்வேறு பிரச்சினைகளால் மனம் வெறுத்த இளைஞர்கள் தேசிய முன்னணியின் பக்கம் சாய்ந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த இடைத்தேர்தலின் வழி, சிலாங்கூர் சட்டமன்றத்தில் தேசிய முன்னணியின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்து இருப்பதோடு 15ஆது பொதுத்தேர்தலில் மிகுந்த உற்சாகத்தோடு  போட்டியிட உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

The post இளம் வாக்காளர்கள் எங்கள் பக்கமே! – அம்னோ பெருமிதம் appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!