International
மலேசியா

உயிர்க் காப்பான் தம்பி! தொடரும் பாசப் போராட்டம்!

ஜார்ஜ் டவுன் , பிப்10- அண்ணன்-தம்பியாக இருந்து விட்டால் போட்டா போட்டி, சின்னச் சின்ன சண்டை, சச்சரவுகள் இல்லாமல் இருக்காது. ருயெல் ராஜா (வயது 19) மற்றும் அஸெர் ராஜா (வயது 1) என்ற சகோதரர்களிடையே அத்தகைய சச்சரவுகள் இருந்தன. ஆனாலும் உயிர் போராட்டம் என்று வந்த போது அண்ணனைக் காப்பாற்ற தம்பி நடத்திய போராட்டம் சகோதரத்துவத்தின் தன்மையை புலப்படுத்துவதாக அமைந்தது.

இவர்கள் இருவருக்கும் இடையே எப்போதும் படிப்பில் போட்டா போட்டி இருக்கும். மற்ற விஷயங்களில் சச்சரவுகள் ஏற்படும். 2008 ஆம் ஆண்டில் முதன் முறையாக ரூயெல் ராஜாவுக்கு லிம்போ பிளாஸ்டிக் லுக்குமியா என்ற இரத்தம் தொடர்பான புற்றுநோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

அவரை குணப்படுத்த ‘ஸ்டெம் செல்’ எனப்படும் தண்டுவட மஜ்ஜை மாற்று சிகிச்சை தேவைப்பட்டது. ருயெலுக்கு பொருந்தக்கூடிய ஸ்டெம் செல் தேடும் நிலை ஏற்பட்ட போது அதிர்ஷ்டவசமாக அண்ணனுக்கு பொருந்தக் கூடியஅம்சம் தம்பி அஸெர் ராஜாவிடம் இருந்தது.

பிரார்த்தனைக்கு பலன் கிடைத்தது. தயங்காமல் முன் வந்தார் அஸெர். உடனுக்குடன் மாற்று அறுவைச் சிகிக்சை செய்யப்பட்டது. குணமடைந்த ருயெல் படிப்பைத் தொடர்ந்தார்.

அண்ணனுக்கும்- தம்பிக்கும் எப்போதும் எதிலும் போட்டியிருக்கும் என்கிறார் அவர்களின் தந்தையான இணைப்பேராசிரியர் டாக்டர் அண்ட்ரூ ராஜா.

ஆனால், மீண்டும் ரூயெலுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் அதே புற்று நோய் மீண்டும் தாக்கியது. இரண்டாவது முறையாகவும் அஸெர் அண்ணனைக் காக்க ஸ்டெம் செல் மஜ்ஜையை வழங்கி மாற்று அறுவைச் சிகிச்சைக்கு உதவினார்.

இரண்டு ஆண்டுகள் படிப்பை நிறுத்தி விட்டு மீண்டும் தொடர்ந்தார் ரூயெல். ஆனால், நோயின் தாக்கத்தால் அவரது வலது கண் பார்வை பறிபோனது.

மீண்டும் அண்ணன் தம்பிக்கு இடையே படிப்பில் போட்டா போட்டி. இருவருமே மிகச் சிறந்த தேர்ச்சிகளுடன் இடைநிலை கல்வியை முடித்துள்ளனர். பாசமிக்க போட்டா போட்டியோடு இவர்களின் வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது.

The post உயிர்க் காப்பான் தம்பி! தொடரும் பாசப் போராட்டம்! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!