International
மலேசியா

என்ன 3 மங்கு செண்டோலின் விலை 114 ரிங்கிட்டா?

மலாக்கா,பிப்.9- பொதுவாக ஒருவர் “செண்டோல்” பதார்த்தத்தை சுவைக்க அவரிடம் 10 ரிங்கிட் இருந்தாலே போதும். ஏனெனில், அதன் விலை 10 ரிங்கிட்டுக்கும் குறைவாகத்தான் இருக்கும்.

ஆனால், மலாக்கா, பண்டார் ஹிலிரில் பிரபலமான “ராஜா செண்டோல் தாமிங் சாரி” 38 ரிங்கிட் என்றால் நம்புவீர்களா? நம்பிதான் ஆக வேண்டும்! ஆம், அண்மையில், அங்கு 3 மங்கு செண்டோலை அருந்திய யாரோ அதன் 114 ரிங்கிட் ரசீதின் படத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்ததால் அவ்விவகாரம் வைரல் ஆனது.

அது தொடர்பில், சம்பந்தப்பட்ட கடையை உள்நாட்டு வாணிப, பயனிட்டாளர் விவகார அமைச்சு விசாரித்தது; பின்னர், ஒரு மங்கு செண்டோலுக்கு 35 ரிங்கிட் விதிப்பது நியாயம்தான் என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

இது என்ன புதுக் கதையாக இருக்கிறது என்கிறீர்களா? பிறகென்ன, மூசா கிங் சுளைகளுடன் கூடிய அந்த செண்டோலை 10 விலைக்கு விற்பது அந்த வியாபாரிக்கு கட்டுப்படி ஆகுமா?

அந்த செண்டோலில் 120-லிருந்து 150 கிராம் வரைக்குமான டுரியான் சுளைகளைக் கலப்பார்களாம்.

2017-ஆம் ஆண்டு முதல் “ராஜா செண்டோல் தாமிங் சாரி” கடை செயல்படுவதாகவும், அந்த நாள் தொட்டே ஒவ்வொரு சுவைக் கொண்ட செண்டோலின் விலைப் பட்டியல் அங்கு கடையில் வைக்கப்பட்டுள்ளதாக அக்கடையின் உரிமையாளர் முகமட் அரிப் காயும் தெரிவித்தார்.

செண்டோல் மூசாங் கிங் 38 ரிங்கிட்டுக்கும், செண்டோல் டுரியான் ஊடாங் மேராவும், செண்டோல் டுரியான் டி24 20 ரிங்கிட்டுக்கும், செண்டோல் டுரியான் காவின் 17 ரிங்கிட்டுக்கும், சாதாரண செண்டோல் 7 ரிங்கிட்டுக்கும் அந்தக் கடையில் விற்கப்படுகிறது.

டுரியான் பழ விலையை அறிந்தவர்களுக்கு, இந்த விலை பெரிதாக இருக்காது.

எனினும், அந்த 3 மங்கு மூசாங் கிங் செண்டோலை அருந்தியவர்கள் ஏன் அந்த ரசீதின் படத்தை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தார்கள் என்று தெரியவில்லை.

ஒருவேளை, சுவையா செண்டோலை அருந்தி இருக்கிறார்கள் என்பதன் அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ளக் கூட இருக்கலாம் என்று அதனை அரீப் நேர்மறை சிந்தனையுடனே எடுத்துக் கொண்டுள்ளார்.

The post என்ன 3 மங்கு செண்டோலின் விலை 114 ரிங்கிட்டா? appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!