International
மலேசியா

எஸ்.எஸ்.டி அமல்; விலைவாசி குறையவில்லை! -துணை நிதியமைச்சர்

கோலாலம்பூர், பிப்.20- ஜி.எஸ்.டி எனப்படும் பொருள் சேவை வரி அகற்றப்பட்டு விற்பனை மற்றும் சேவை வரி அமலுக்கு வந்த போதிலும், பொருட்களின் விலை குறையவில்லை என்று நிதியமைச்சின் துணை அமைச்சர் டத்தோ அமிருடின் ஹம்சா கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எஸ்.எஸ்.டியை அமல்படுத்துவன் மூலம், ஆண்டு ஒன்றுக்கு ரிம.21 பில்லியனை தான் வசூலிக்க முடியும் என்பதை அரசாங்கம் நன்கு அறிந்திருந்தது. ஜி.எஸ்.டியின் மூலம் வசூலிக்கப் பட்ட தொகையைக் காட்டிலும், அத்தொகை குறைவு என்று அமிருடின் நிகழ்வொன்றில் கூறியதாக அத்தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

“ரிம.23 மில்லியன் வருவாய் இழப்பினாலும், பொருட்களின் விலைகள் குறையவில்லை” என்று அவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது, ஜி.எஸ்.டி அமலில் இருந்திருந்தால், அதன் வாயிலாக ரிம.44 பில்லியன் வருவாய் பெற்றிருக்க முடியும் என்றும் அவர் சொன்னதாக கூறப்பட்டுள்ளது.

“மக்கள் பொருட்களின் விலை அதிகரிக்கின்றது என்று குறைப்பட்டு வருகிறார்கள். ஆனால், பொருட்களின் விலை மிகக் கூடுதலாக அதிகரிக்கவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

இந்தப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தாவிடில், நாட்டின் நிலைமை பாதிக்கும் என்ற அடிப்படையில், நிதியமைச்சு மற்றும் உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சை சேர்ந்த உறுப்பினர்களை கொண்ட பணிக்குழு ஒன்றை அரசாங்கம் அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post எஸ்.எஸ்.டி அமல்; விலைவாசி குறையவில்லை! -துணை நிதியமைச்சர் appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!