International
மலேசியா

ஐஜிபி – துணை ஐஜிபி விரைவில் ஓய்வு: புதியவர்கள் யார்?

கோலாலம்பூர்,பிப்.10- மலேசியப் போலீஸ் படைத் தலைவர்(ஐஜிபி) முகம்மட் ஃபுஸி ஹருண் மற்றும் துணைத் தலைவர் நோர் ரஷிட் இப்ராகிம் ஆகியோருக்குப் பதிலாக புதியவர்களை நியமிப்பது குறித்து பிரதமருடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்று உள்துறை அமைச்சு அறிவித்திருக்கிறது.

இவர்கள் இருவரும் விரைவில் தங்களது பதவிகளில் இருந்து ஓய்வு பெறவிருக்கிறார்கள். துணை ஐஜிபி நோர் ரஷிட் எதிர்வரும் மார்ச் மாதம் ஓய்வு பெறும் நிலையில், ஐஜிபி ஃபுஸி ஹருண் எதிர்வரும் மே மாதத்தில் ஓய்வு பெறவுள்ளார்.

இந்த இரு பதவிகளும் மிக முக்கியமானவை என்பதால் அது குறித்து பிரதமர் துன் மகாதீருடன் தாம் கலந்து ஆலோசிக்க விருப்பதாக உள்துறை அமைச்சர் மொகிடின் யாசின் தெரிவித்தார்.

The post ஐஜிபி – துணை ஐஜிபி விரைவில் ஓய்வு: புதியவர்கள் யார்? appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!