International
மலேசியா

ஓட்டுனர் உரிமம், வாகன பெர்மிட் இணையம் வழி பெற வசதி

கோலாலம்பூர், மார்ச். 1- இணைய வசதிகளைப் பயன்படுத்தி ஓட்டுநர் உரிமம் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கான பெர்மிட்டுகளைப் பெற நடவடிக்கை எடுக்கப்படுவதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக் தெரிவித்தார்.

அத்திட்டம் இவ்வாண்டு இறுதியில் அமலுக்கு வரும் என கூறிய அவர், பொதுமக்கள் அவற்றைப் பெற போக்குவரத்து அலுவலகங்களில் வரிசைப் பிடித்து கால் கடுக்க நிற்பதைத் தடுக்கும். இந்த நடைமுறையின் கீழ் பொதுமக்களின் பணம் விரையமாவதைத் தடுக்க முடியும்.

மேலும் பேருந்து நடத்துனர்கள் சிறப்புப் பெர்மிட்டுகளைப் பெற போக்குவரத்து அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

The post ஓட்டுனர் உரிமம், வாகன பெர்மிட் இணையம் வழி பெற வசதி appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!