International
மலேசியா

காருக்குள் நுழைய முயன்ற அந்நியனின் அடாவடி! தப்பிய குடும்ப மாது- (video)

கோலாலம்பூர், பிப், 27- காலை 11 மணியளவில் குடியிருப்பு பகுதியில் 6 வயது மகனுடன் ஒரு குடும்ப மாது காருக்குள் இருந்த வேளையில், கார் கதவின் கண்ணாடியைத் தட்டி, காரைத் திறக்கும் படி வற்புறுத்திய அன்னிய நாட்டு ஆசாமிக்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

கதவைத் திறக்க மறுத்து, “நீயார்?” என்று கேட்ட அந்த குடும்ப மாதுவிடம் “நான் உங்களுக்கு சொந்தக்காரன்தான்” என்று அந்த நபர் உறியுள்ளான்.

Posted by Ez Azhar on Sunday, 24 February 2019

fb:Ez Azhar

அப்படியொரு சொந்தக்காரனை தமக்கு தெரியது என்பதை உணர்ந்த அந்த மாது கார் கதவைத் திறக்க மறுத்தார் என்றாலும் திரும்பத் திரும்பக் காரின் கண்ணாடியைத் தட்டி, கதவைத் திறக்கும்படி அந்த ஆசாமி வற்புறுத்திய போது அச்சம் அடைந்த அந்த மாது.

பீதியுடன் தன்னுடைய கணவருக்கு தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு தகவல் சொன்னவுடன் அருகில் தனது வீட்டிலுருந்த அந்த மாதுவின் கணவர் ஓடிவந்தார்.

சம்பந்தப்பட்ட ஆசாமியை வழிமறித்து அவரிடம் ” எதுக்காக காரைத் திறக்கும்படி என் மனைவியிடம் வற்புறுத்தினாய்” என்று உரத்த குரலில் வினவினார்.

அவர்களுக்கு முன்பின் தெரியாத அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார். எனினும் நடந்த சம்பவம் குறித்து தன்னுடைய முகநூலில் பதிவிட்டுள்ள இஷ் அஷார் என்ற அந்த மாது பின்னர், இது தொடர்பாக போலீசிலும் புகார் செய்துள்ளார்.

அந்த நபர் நல்ல நோக்கத்தோடு அவ்வாறு நடந்து கொண்டதாக தெரியவில்லை. எனவே, இது போன்ற சம்பவங்களின் போது பெண்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக முகநுலில் இந்தச் சம்பவத்தை பதிவு செய்ததாக அஷ் அஷார் குறிப்பிட்டுள்ளார்

The post காருக்குள் நுழைய முயன்ற அந்நியனின் அடாவடி! தப்பிய குடும்ப மாது- (video) appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!