International
மலேசியா

கார் விபத்து: முன்னாள் மஇகா தொகுதி தலைவர் ஜி.எம். கண்ணன் மரணம்!

சிரம்பான், மார்ச்.3- இன்று நண்பகலில் ஜாலான் ராசா ஜெயாவில் நடந்த சாலை விபத்து ஒன்றில் மஇகா ராசா  தொகுதியின் முன்னாள்  தலைவர் டத்தோ ஜி.எம். கண்ணன் உயிரிழந்தார்.

நண்பகல் 12.20 மணியளவில் அவர் ஓட்டிச் சென்ற மைவி கார் கட்டுப்பாட்டை இழந்து ஜாலான் ராசா ஜெயாவிலுள்ள சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

79 வயதுடைய கண்ணன் தலையில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்ததாக சிரம்பான் போலீஸ் படைத்தலைவர் தியூ ஹோக் போ தெரிவித்தார்.

மும்முனைச் சாலை சந்திப்பு ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்த அவருடைய கார், அருகில் இருந்த புதர்களுள் புகுந்து மரத்தில் மோதி கடுமையாக சேதமடைந்தது.

F

The post கார் விபத்து: முன்னாள் மஇகா தொகுதி தலைவர் ஜி.எம். கண்ணன் மரணம்! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!