International
மலேசியா

கிள்ளானில் அதிரடிச் சோதனை: தப்பிக்க பல யுக்திகளை கையாண்ட அன்னிய தொழிலாளர்கள்!

ஷாஆலம், மார்ச்.3- கிள்ளான், பண்டார் சுல்தான் சுலைமான் பகுதியிலுள்ள தொழிலாளர் தங்கும் விடுதிகளில் சிலாங்கூர் மாநில குடிநுழைவுத்துறை அதிரடிச் சோதனைகளை நடத்திய போது திரைப்படங்களில் வருவது போல சட்ட விரோதத்
தொழிலாளர்கள் பலர் தப்பித்துச் செல்ல பல்வேறு யுக்திகளைக் கையாண்டனர்.

கட்டடத்தின் ஜன்னல்கள் வழியாக சிலர் வெளியே குதித்துத் தப்பித்து ஓட முயன்றனர். சிலர் குப்பைத் தொட்டிகளில் பதுங்கி இருந்தனர். மேலும் சிலர் வீட்டின் கூரைகளுக்குள் ஒளிந்து கொண்டிருந்தனர் என்று மலேசியக் கினி செய்தி கூறுகிறது.

இவர்கள் தப்பிச் செல்ல பல யுக்திகளைக் கையாண்ட போதிலும் குடி நுழைவு அதிகாரிகள் சுற்றி வளைத்து 149 அன்னிய நாட்டவர்களைக் கைது செய்தனர்.

கைதானவர்களில் 7 பேர் இந்தோனிசியர்கள், 82 பேர் வங்காள தேசிகள், 25 பேர் இந்தியர்கள், 4 பேர் பாகிஸ்தானியர்கள், 7 பேர் நேப்பாள பிரஜைகள் அடங்குவர் என்று மாநில குடிநுழைவுத்துறை இயக்குனர் முகம்மட் சுக்ரி நாவி தெரிவித்தார்.

இரவு 11 மணி தொடங்கி அதிகாலை 4 மணிவரையில் தாங்கள் இந்தச் சோதனை நடவடிக்கை களை மேற்கொண்டதாகவும் இந்தச் சோதனையின் போது 679 அன்னிய நாட்டு பிரஜைகளிடம் சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர்
சொன்னார்.

கைதானவர்களில் பெரும்பாலோர் அருகிலுள்ள பல்வேறு
தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்துள்ளனர். இத்தகைய
சட்ட விரோதத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளும் முதலாளிகளுக்கு எதிராகவும் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முகம்மட் சுக்ரி கூறினார்.

The post கிள்ளானில் அதிரடிச் சோதனை: தப்பிக்க பல யுக்திகளை கையாண்ட அன்னிய தொழிலாளர்கள்! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!