International
மலேசியா

குறைந்தபட்ச சம்பளம்: குலசேகரன் கருத்துக்கு எம்டியுசி எதிர்ப்பு

கோலாலம்பூர், பிப். 28 – மனிதவள அமைச்சர் பரிந்துரைத்துள்ள தொழில் துறைகளுக்கு ஏற்றவாறு குறைந்தபட்ச சம்பள நிர்ணயத்தை மலேசியா தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்டியுசி) எதிர்க்கிறது அதன் தலைமைச் செயலாளர் ஜே.சாலமன் தெரிவித்தார்.

ஒரே துறையில் இருக்கும் பல்வேறு நிறுவனங்களின் பலமும் பலவீனமும் வெவ்வேறாக இருக்கும்போது, குறைந்தபட்ச சம்பளம் வழங்குவதால் நிறுவனங்கள் மூடப்படுவதாகக் கூறுவது ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லையென அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் செல்வமானது தொழில்துறையைச் சார்ந்த முதலாளிகள் மட்டுமே அனுபவிக்காமல், அடிமட்ட தொழிலாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் அனுபவிக்க வேண்டுமென்ற என்ற பரந்த மனப்பான்மை வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

தற்போதுள்ள நடைமுறைக்குப் பதிலாகத் தொழில்துறைக்கு ஏற்றவாறு குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாக மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் அண்மையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்தோனேசியாவில் அனுசரிப்பது போன்று, நகர்புற, கிராமப்புற மற்றும் வட்டாரங்களின் வாழ்க்கைச் செலவினங்களுக்கு ஏற்றவாறு குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டுமென கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ கருத்துரைத்துள்ளார்

The post குறைந்தபட்ச சம்பளம்: குலசேகரன் கருத்துக்கு எம்டியுசி எதிர்ப்பு appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!