International
மலேசியா

‘கூச்சல் போடுவதை நிறுத்துக!’ -நஜிப்புக்கு அஷார் அறிவுறுத்து

கோலாலம்பூர், பிப், 28- தேர்தல் குற்றங்கள் தொடர்பாக தகவல் வைத்திருந்ததால், முன்னாள் பிரதமர் நஜிப் அது குறித்து போலீசில் புகார் செய்யத் தயாரா? என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் அஷார் ஹருண் சவால் விடுத்தார்.

பெர்சே அமைப்பின் கட்டிப்பாட்டில் தேர்தல் ஆணையம் இருப்பதாக கிண்டலடித்து இருப்பது கெட்ட நோக்கம் கொண்ட செயல் மட்டுமல்ல, அது அவதூறானது என்று அஷார் ஹருண் தெரிவித்தார்.

இப்போது தேர்தல் காலத்தில் இடம் பெறும் லஞ்சம், ஊழல் என்பதெல்லாம் குற்றமே அல்ல என்ற முடிவுக்கு நஜிப் வந்திருப்பது, போலீஸ். ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் முயற்சிகளை அவமதிக்கும் செயல் என்று அவர் சாடினார்.

தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கூச்சல் போடுவதை நஜிப் நிறுத்திக் கொள்ள வேண்டும். தேர்தல் குற்றம் பற்றிய தகவல் இருந்தால் அவர் போலீசிலோ அல்லது ஊழல் தடுப்பு ஆணையத்திலோ புகார் செய்யலாம் என்று அஷார் ஹருண் அறிவுறுத்தினார்.

The post ‘கூச்சல் போடுவதை நிறுத்துக!’ -நஜிப்புக்கு அஷார் அறிவுறுத்து appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!