International
மலேசியா

கே.எல்.செண்ட்ரலில் ஓட்டுனரை தாக்கிய ஆசாமி கைது!

கோலாலம்பூர்,பிப்,11- கோலாலம்பூர் செண்ட்ரலுக்கு அருகில் வாடகைக் கார் ஓட்டுனர் ஒருவரை கண்மூடித்தனமாக தாக்கிய நபர் ஒருவரைப் போலீசார் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும் 53 வயதுடைய அந்த வாடகைக் கார் ஓட்டுனர் இது குறித்து போலீசில் புகார் செய்ததாகவும் பிரிக்பீல்ட்ஸ் ஓசிபிடி ருஸ்லான் காலிட் சொன்னார்.

காலை 11 மணியளவில் பயணிகளுக்காக அந்த வாடகைக் கார் ஓட்டுனர் காத்திருந்த போது திடீரென அங்கு வந்த 34 வயதுடைய நபர் ஒருவர் அவரை கடுமையாகத் தாக்கினார்.

எனினும், அங்கிருந்த பொதுமக்களில் சிலர் தடுத்து நிறுத்தி வாடகைக் கார் ஓட்டுனரை காப்பாற்றினர்.

கடுமையாக காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இச்சம்பவம் தொடர்பில் அந்த நபரை தாங்கள் விசாரணைக்காக கைது செய்ததாக ஓசிபிடி சொன்னார்.

The post கே.எல்.செண்ட்ரலில் ஓட்டுனரை தாக்கிய ஆசாமி கைது! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!