International
மலேசியா

கே.பி.ஜே. விவகாரம்: துன் சாமிவேலு மீது எம்ஏசிசி.யில் புகார்! -லோகநாதன்

கோலாலம்பூர், மார்ச், 6- கேபிஜே கூட்டுறவுக் கழகத்திற்கு சொந்தமான நில விவகாரம் உள்ளிட்ட சில முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் மஇகா தேசிய தலைவர் துன் சாமிவேலுக்கு எதிராக தாம் எம்.ஏ.சி.சி எனப்படும் ஊழல் தடுப்பு ஆணையத்தில் மூன்றாவது முறையாகப் புகார் செய்யப் போவதாக முன்னாள் மஇகா தொகுதி காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினர்.

மார்ச் 8 ஆம் தேதி வெள்ளிக் கிழமை தாம் இந்தப் புகாரைச் செய்யப் போவதாக சுங்கைசிப்புட் மஇகா தொகுதி காங்கிரசின் முன்னாள் தலைவரான எம். லோகநாதன் கூறியதாக மலேசியக் கினி செய்தி ஒன்று கூறுகிறது.

இவ்விவகாரம் தொடர்பில் தாம் ஏற்கெனவே இருமுறை எம்.ஏ.சி.சி.யில் புகார் செய்திருப்பதாகவும் மூன்றாவது முறையாக சாமிவேலுவின் 83 ஆவது பிறந்த நாளன்று புகார் செய்யப் போவதாகவும் அவர் சொன்னதாக மலேசியக்கினி தெரிவித்தது.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்தவர் சாமிவேலு. இந்தத் தொகுதியில் மஇகா தலைவராக இருந்தவர் லோகநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

தாம் செய்யப் போகும் புகார் தொடர்பான விபரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார். கே.பி.ஜே. கூட்டுறவுக்குச் சொந்தமான 40.8 ஹெக்டர் நிலம், சந்தை விலைக்கும் குறைவான விலையில் விற்கப் பட்டிருப்பதாக லோகநாதன் குற்றஞ்சாட்டினார். எனினும் மேற்கொண்டு இதர முறைகேடுகள் பற்றி அவர் விளக்கம் கூற மறுத்துவிட்டார்.

The post கே.பி.ஜே. விவகாரம்: துன் சாமிவேலு மீது எம்ஏசிசி.யில் புகார்! -லோகநாதன் appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!