International
மலேசியா

கைப்பேசியை பயன்படுத்திக் கொண்டிருந்த மியன்மார் ஆடவர் மின்னலுக்கு பலியானார்!

கோலாலம்பூர், மார்ச் 11- மின்னல் தாக்கியதில் மியன்மார் ஆடவர் ஒருவர் மரணமடைந்த வேளையில், மேலும் 3 ஆடவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இத்துயர சம்பவம் செத்தியா அலாம் திடலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் நடந்தது. வானிலை காரணமாக நட்புமுறை கால்பந்து ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்ட பின்னர், ஆட்டக்காரர்களும் ஆதரவாளர்களும் திடலில் பேசிக் கொண்டிருந்த மின்னல் தாக்கியது.

அப்போது, திடலில் மற்றவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த ரொஹிமுல்லா (வயது 19) என்ற இளைஞர் கைப்பேசியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் திடீரென மின்னல் அவர் மீது தாக்கியதில் அவரின் உடை தீப்பற்றி எரிந்ததாக அவரின் நண்பர் முகமட் நூர் ஸாபார் (வயது 19) தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில், அப்துல் ரஹ்மான் அபுல் ஹுசின்(வயது 30), கமாலுடின் அபு தாஹிர்( வயது 30) மற்றும் ஹுசேயின் அகமட் ஆசாட்(வயது 20) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

பலியானவரின் சகோதரர் ஆரோ ஃபுல்லா( வயது22), தமது சகோதரர் திடலுக்குச் சென்றது பற்றி தமக்குத் தெரியாது என்றும், நடந்த சம்பவத்தை மியன்மாரில் உள்ள குடும்பத்தினருக்குத் தெரிவித்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.

The post கைப்பேசியை பயன்படுத்திக் கொண்டிருந்த மியன்மார் ஆடவர் மின்னலுக்கு பலியானார்! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!