International
மலேசியா

‘கொடுத்த கடன் என்ன ஆச்சு?’ – எட்மண்ட் சந்தாரா: -‘திருப்பிக் கொடுத்தாச்சு!’ – டாக்டர் ஶ்ரீராம்

கோலாலம்பூர், மார்ச்.10- ரந்தாவ் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப் படுவார் என்று எதிர்பார்க்கப்படும் டாக்டர் ஶ்ரீராம் சின்னச்சாமி, தம்மிடம் கடன்பட்டுள்ளார் என்று சிகாமட் பிகேஆர் எம்.பி.யான எட்மண்ட் சந்தாரா போலீசில் புகார் செய்துள்ளார். அதே வேளையில் இதனை டாக்டர் ஶ்ரீராம் மறுத்துள்ளார்.

அவர் தமக்கு 62 ஆயிரம் ரிங்கிட் கடன்பட்டுள்ளார் என்றும் இந்தப் பணத்தை ஶ்ரீராம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தன்னுடைய மகளின் கல்லூரி பதிவுக்கான கட்டணம் செலுத்த தம்மிடம் பெற்றதாகவும் எட்மண்ட் சந்தாரா போலீஸ் புகாரில் கூறியுள்ளார்.

இந்தப் போலீஸ் புகார் தொடர்பான தகவல், தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்தத் தகவலை எட்மண்ட் சந்தாரா உறுதிப்படுத்தி இருப்பதாக மலேசியக் கினி செய்தி ஒன்று கூறுகிறது.

மேலும் பணத்தை திரும்பத் தரும் வகையில் ஶ்ரீராம் கொடுத்த காசோலைகளும் திரும்பி விட்டதாகவும் அந்தக் காசோலைகளை ரத்து செய்யும் படி வங்கிக்கு பணிக்கப்பட்டதாகவும் எட்மண்ட் சந்தாரா சொன்னார்.

ஆனால், அதேவேளையில் தாம் கடன் வாங்கியதை உறுதிப்படுத்தியுள்ள டாக்டர் ஶ்ரீராம், அந்தப் பணத்தை தாம் முழுமையாகத் திருப்பிச் செலுத்தி விட்டதாகத் தெரிவித்தார். தம்மை அவமதிக்க வேண்டும் என்பதற்காக பிகேஆர் கட்சியிலுள்ள சில தரப்புகள் செய்துள்ள அவதூறு இதுவென ஶ்ரீராம் குறிப்பிட்டுள்ளார்.

The post ‘கொடுத்த கடன் என்ன ஆச்சு?’ – எட்மண்ட் சந்தாரா: -‘திருப்பிக் கொடுத்தாச்சு!’ – டாக்டர் ஶ்ரீராம் appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!