International
மலேசியா

சட்டத் திருத்தம்: மக்களுக்கு வெளியிடுவாரா குலசேகரன்? -தொழிலாளர் தரப்பு

கோலாலம்பூர், மார்ச். 9- நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்காக தாக்கல் செய்யப்படவிருக்கும் 1955ஆம் ஆண்டின் வேலை வாய்ப்புச் சட்டம் மீதான உத்தேச திருத்த மசோதாவை அதற்கு முன்பாக பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என்று மனித வள அமைச்சர் எம். குலசேகரனுக்கு தொழிலாளர் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்தச் சட்டத்திருத்த மசோதா தொடர்பாக பொதுமக்களும் தொழிற்சங்கங்களும் எதுவும் அறியப்படாத இருண்மை நிலையில் இருக்கின்றனர் என்று தொழிலாளர் குழுவின் பேச்சாளரான என். கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்தத் திருத்த மசோதா மீதான மக்களின் கருத்துக்களையும் அரசு சாரா அமைப்புக்களின் கருத்துக்களையும் நான்கு மாதங்களுக்கு முன்பு கோரியிருந்த மனித வள அமைச்சு, அதற்குப் பின்னர் உள்ள நிலவரம் என்ன என்பது பற்றி எதனையும் வெளியே சொல்லவேயில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

The post சட்டத் திருத்தம்: மக்களுக்கு வெளியிடுவாரா குலசேகரன்? -தொழிலாளர் தரப்பு appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!