International
மலேசியா

சட்டவிரோத தொழிலாளி, சம்பளப் பாக்கியைக் கோர முடியாதா?

கோலாலம்பூர், மார்ச். 6-  இந்தோனேசிய பணிப் பெண் ஒருவர் தமக்குச் சேர வேண்டிய சம்பளப் பாக்கியைக் கோரி, ஷா ஆலம் உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

ஐந்து ஆண்டு காலமாக தமது முதலாளியால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும்  30,000 ரிங்கிட் சம்பளப் பணத்தை நோனா என்ற மாது பெறுவதில் சிக்கலை எதிர்நோக்குகிறார்.

அவர் சட்டப்பூர்வ தொழிலாளி இல்லை என்பதால்  அப்பணத்தைக் கோர முடியாது என 2017ஆம் ஆண்டு போர்ட் கிள்ளான் மனிதவள இலாகா அறிவித்து உள்ளதாக தெனாங்காநித்தா அரசு சாரா இயக்கத்தின் ஜோசப் பவுல் தாஸ் தெரிவித்தார்.

அவர் வேலை செய்வதற்கான அனுமதியைப் பெறவில்லை என்பதால், சம்பளப் பாக்கியைப் சட்டப்படி பெற உரிமை இல்லை என அது சம்பந்தமான விசாரணை தெரிவித்துள்ளது.

எனினும், தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய சம்பளத்தை முதலாளிகள் தரவேண்டுமென்று தொழிலாளர் சட்டம் சொல்வதாகவும், வாழ்க்கைக்கு வேண்டிய தேவைகள்  உட்பட அனைத்தையும் மக்கள் பெற உரிமை உள்ளதாக அரசியலமைப்பு விதி கூறுவதாகவும் ஜோசப் பவுல் சுட்டிக்காட்டினார்.

எனவே, சட்டவிரோத அந்நியர்களும் மற்ற தொழிலாளிகளைப் போன்றே  சம்பளத்தையும் சம்பளப் பாக்கியையும் பெற விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்

The post சட்டவிரோத தொழிலாளி, சம்பளப் பாக்கியைக் கோர முடியாதா? appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!