International
மலேசியா

சவ வாகனம் தீக்கிரை! உள்ளே இருந்த சவம் மட்டும் தப்பியது எப்படி? -(Video)

கோத்தாபாரு, மார்ச். 5- மருத்துவமனையில் இருந்து சவத்தை எடுத்துக் கொண்டு பாச்சோக் மயானத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வழியில் சிறிது நேரம் நிறுத்தப்பட்ட சவ வாகனம் ஒன்று திடீரெனத் தீப்பற்றியது. இந்தத் தீயில் அந்த வாகனும் அதனுள் இருந்த சவப்பெட்டியும் எரிந்த நிலையில், திடுக்கிடும் வகையில் சவப்பெட்டிக்குள் இருந்த உடல் மட்டும் எந்தப் பாதிப்பும் இன்றி அப்படியே இருந்தது.

இந்தச் சம்பவம் நேற்றுக் காலை கோத்தாபாரு, ஜாலான் பிந்து போங் என்ற இடத்தில் நடந்தது. சுமார் 41 வயதுடைய சீன ஆடவர் ஒருவரின் உடலை எடுத்துக் கொண்டு மயானத்தை நோக்கிச் சவ வாகனம் சென்று கொண்டிருந்த போது மரணச் சான்றிதழை போட்டோ நகல் எடுப்பதற்காக ஜாலான் பிந்து போங்கிலுள்ள புத்தகக் கடை ஒன்றின் முன் வாகனம் நிறுத்தப்பட்டது.

அந்த வாகனத்தில் இருந்த இருவர் அந்த வாகனத்தை விட்டு இறங்கிய அடுத்த கணமே எதிர்பாராத விதமாக அந்தச் சவ வாகனம் தீப் பிடித்தது. மிக வேகமாகப் பரவிய தீ, வாகனத்தை முற்றாகச் சூழ்ந்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், தீயைக் கட்டுப்படுத்தினர் எனினும் அந்த வாகனம் எரிந்து விட்டது. உள்ளே இருந்த சவப்பட்டியும் எரிந்து காணப்பட்டது. ஆனால் சவப் பெட்டிக்குள் இருந்த உடல் மட்டும் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் இருந்தது வியப்பை ஏற்படுத்தியது.

The post சவ வாகனம் தீக்கிரை! உள்ளே இருந்த சவம் மட்டும் தப்பியது எப்படி? -(Video) appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!