International
மலேசியா

சினிமா தொழில் நுட்பப் பயிற்சிகள்; பரிசீலிக்கப்படும்! – குலசேகரன்

ஈப்போ, பிப் . 3- மலேசியாவில் சினிமா தொழில் நுட்பத் துறையில் இளைஞர்கள் ஊக்குவிக்கப் படவேண்டும் என்று நடிகர் கமல்ஹசான் கூறியதாக மனித வள அமைச்சர் எம். குலசேகரன் தகவல் தெரிவித்துள்ளார்

அண்மையில் தமிழகம் சென்றிருந்தபோது கமல்ஹாசனைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தபோது அவர் இந்த யோசனையை முன் வைத்தார்.இந்த பயிற்சியை இளைஞர்கள் பெற்றிருந்தால் மலேசியாவில் மேலும் தரமான படங்களைத் தயாரிக்க வாய்ப்பை ஏற்படுத்தும்.

அந்த வகையில் நாட்டிலுள்ள தொழில் நுட்ப பயிற்சி கழகங்களில் சினிமா தொழில் தொழிநுட்பத்தை இணைப்பது குறித்து உத்தேசிக்கப்படும் என்ற கருத்தையும் குலசேகரன் வெளிப்படுத்தினார்

இங்கு ஜெலப்பாங்கில் மனிதவள அமைச்சால் இயங்கி வரும் தொழில் பயிற்சி கல்லூரியில் மலேசிய சத்திரியா கல்வி மைய மாணவர்களுடன் நடைபெற்ற சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு அமைச்சர் குலசேகரன் தெரிவித்தார்.

இன்று பலர் பல்வேறு துறைகளில் கல்வியை மேற்கொண்டு வந்தாலும் தொழில் துறையில் கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு உடனடி வேலைகள் காத்து உள்ளது.

இன்னும் பலர் அது குறித்து உணர்வது கிடையாது. இங்கு கடனில்லா கல்வியை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே அரசாங்கம் இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்குகிறது இதனை முறையே பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அரசாங்கம் வழி நடத்தி வரும் தொழில் துறைகளில் வழங்கப்படும் வாய்ப்புகள் குறித்து இதில் கலந்துக்கொண்ட சுமார் 300 மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இநிந்கழ்ச்சியில் சத்ரியாகல்வி மையத்தின் தலைவர் ஜே.பழனியப்பன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

The post சினிமா தொழில் நுட்பப் பயிற்சிகள்; பரிசீலிக்கப்படும்! – குலசேகரன் appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!