International
மலேசியா

சிறார் ஆபாச வலைத்தளங்கள்; முடக்குவதில் சவால்!

கோலாலம்பூர்,பிப்.11- ஐ.எஸ்.பி எனப்படும் இணைய சேவை வழங்குநர்கள் சிறார் ஆபாச வலைத்தளங்களை முடக்க பல்வேறான முயற்சிகளை எடுத்து வருகின்ற போதிலும், அந்த வலைத்தளங்களை முடக்குவது பெரும் சவாலாக அமைந்து வருகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இணையத் தளத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அந்த ஆபாச வலைத்தளங்களுக்கான உள்ளடக்கங்கள் பதிவு செய்யப் படுகின்றன என்பதால், அவற்றை முடக்குவது பெரும் சவாலாக அமைந்துள்ளது என்று மலேசிய தகவல் தொடர்பு -பல்லூடக ஆணையத்தின் நெட்வர்க் பாதுகாப்பு மற்றும் அமலாக்க செயல்நிலை அதிகாரியான ஜூல்கார்னைய்ன் முகமட் யாசின் கூறினார்.

“உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அந்த ஆபாச உள்ளடக்கங்களை பதிவு செய்ய இணையத்தளம் வழி வகுக்கிறது. அவ்வாறு இணையம் வாயிலாக பதிவு அல்லது பகிரப் படும் சிறார் ஆபாச உள்ளடக்கங்களை முடக்குவதில் பல்வேறான சிரமங்கள் உள்ளன.

“அனைத்துலக ரீதியில், இவ்வாறான சிறார் ஆபாச உள்ளடக்கங்களை முடக்க அரசாங்கத்திற்கு உதவிகள் மற்றும் ஒத்துழைப்புகள் தேவைப்படுகின்றன” என்று ஜூல்கார்னைய்ன் கூறினார்.

இதனிடையில், மலேசியாவின் விதிமுறைகளை மீறும் அனைத்து வலைத்தளங்களும் தொடர்ந்து முடக்கப் பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து 2018-ஆம் ஆண்டு வரை 401 சிறார் ஆபாச வலைத்தளங்களை போலீஸ் மற்றும் எம்.சி.எம்.சி தரப்புகள் முடக்கியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்

The post சிறார் ஆபாச வலைத்தளங்கள்; முடக்குவதில் சவால்! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!