International
மலேசியா

சுங்கை போலோவில் தீப் பற்றிய வாடை: மகப்பேறு பிரிவு உடனடி வெளியேற்றம்! – Video

சுங்கை பூலோ, மார்ச், 9- சுங்கை பூலோ மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில், திடீரென தீப்பற்றி எரியும் வாடை மிகக் கடுமையாக வீசியதை அடுத்து, உடனடியாக அந்தப் பிரிவில் இருந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

fb: info roadblock JPJ/Polis

பின்னர் இது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப்படைப் பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் விரைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

நேற்று பிற்பகல் 6:30 மணியளவில் தீ பற்றிய வாடை வீசியதாக தெரிய வந்தது. அங்கிருந்த தாதியர்களும் ஊழியர்களும் குழந்தைகளையும் சிகிச்சை பெற்று வந்த தாய்மார்களையும் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்ட ஒரு மணி நேரச் சோதனைக்குப் பின்னர், தீ ஆபத்து எதுவும் இல்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர். இதன் பிறகு, குழந்தைகளும் தாய்மார்களும் மீண்டும் மகப்பேறு பிரிவுக்கு திரும்பினர்.

இச்சம்பவம் குறித்து கருத்துரைத்த சுங்கை பூலோ மருத்துவமனை இயக்குனர் டாக்டர் கமாருடின் அலியாஸ், மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் பிளாக்-சி பகுதியில் இத்தகைய தீப் பற்றிய வாடை வந்துள்ளது. இங்குதான் மகப்பேறு பிரிவு அமைந்துள்ளது என்று தெரிவித்தார். இது குறித்து தாங்கள் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.

The post சுங்கை போலோவில் தீப் பற்றிய வாடை: மகப்பேறு பிரிவு உடனடி வெளியேற்றம்! – Video appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!