International
மலேசியா

சூராவில் சிலைகள்: குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார் ஹெல்மி ஒஸ்மான்!

கோலாலம்பூர், பிப். 27 – சூராவில் சிலைகளை வைத்து அதன் புனிதத் தன்மையைக் கெடுத்ததாக ஹெல்மி ஓஸ்மான் (வயது 37) என்பவர் கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அக்குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார்.

சூராவின் முன் சிலைகளைக் கொண்டு வந்து வைத்து அதன் புனிதத்தைக் கெடுத்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளும் சிலையை ஒரு வீட்டில் இருந்து திருடிய ஒரு குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டன.

அந்த மூன்று குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக் கொண்டார். இந்த மூன்று குற்றச்சாட்டுகளும் இருவேறு மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் சுமத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றவியல் சட்டம் 295இன் கீழ் சூராவின் புனிதத்தைக் கெடுத்ததாக சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு ஈராண்டு சிறைத் தண்டனையும் யும் குற்றவியல் சட்டம் 379 இன் கீழ் சுமத்தப்பட்ட சிலையைத் திருடிய குற்றத்திற்கு 7 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

வழக்கை விசாரித்த நீதிபதி முகமட் அஸாம், ஹெல்மி ஓஸ்மானின் மனநிலை தகுதியைச் சோதனையிட அவர் பேரா, உலு கிந்தாவில் உள்ள மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும் அந்த அறிக்கையை ஆராய, மார்ச் 27இல் நீதிமன்றம் மீண்டும் கூடும் என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஹெல்மி ஞாயிற்றுக்கிழமை தாமான் பெண்டாமாரில் கைது செய்யப்பட்டார்.

The post சூராவில் சிலைகள்: குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார் ஹெல்மி ஒஸ்மான்! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!