International
மலேசியா

செமிஞ்சே தேர்தல்: தேசிய முன்னணி வென்றது (அதிகாரப்பூர்வமற்ற தகவல்)

செமிஞ்சே, மார்ச் 2 – செமிஞ்சே சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.  அதன் வேட்பாளர் ஸக்காரியா ஹனாஃபி கிட்டத்தட்ட18,864 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.

இரவு 8.10 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 1,514 வாக்குகள் வித்தியாசத்தில் பக்காத்தான் வேட்பாளர் ஐமான் ஸைனான் பின்தங்கினார். அவர் 17,350 வாக்குகள் பெற்றார்.தேசிய முன்னணியின் வெற்றி உறுதியாகி  இருப்பதாக தெரிகிறது. இன்னும் சில நூறு வாக்குகளே இருப்பதாக கூறப்பட்டது.

அம்னோ தலைவர்கள் பலர் பிளாசா டத்தோ முகம்மட் சைட்டிலுள்ள தேசிய முன்னணி செயல் நடவடிக்கை அலுவலகத்தில் குழுமியுள்ளனர்.

இந்நிலையில் பக்காத்தான் ஹரப்பான் தலைவர்கள் யாரும் வாக்கு எண்ணிக்கை பகுதியில் காணப்படவில்லை.

பி.எஸ்.எம். வேட்பாளர் நிக் அஃபிக் 839 வாக்குகள் பெற்றிருந்தார். சுயேட்சை வேட்பாளர் குவான் சீ ஹெங் 688 வாக்குகள் பெற்றிருந்தார். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

The post செமிஞ்சே தேர்தல்: தேசிய முன்னணி வென்றது (அதிகாரப்பூர்வமற்ற தகவல்) appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!